வட அமெரிக்கா

கனடாவை அச்சுறுத்தும் வெள்ளம் – 2 சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் மரணம்

கனடாவின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள 2 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து மரண எண்ணிக்கை 3ஆக அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை நோவா ஸ்கோஷியாவில் (Nova Scotia) உள்ள தங்களது வீட்டை விட்டு வெளியேறச் சிறுவர்கள் முயன்றபோது அவர்களை ஏற்றியிருந்த வாகனம் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டது.

காரில் இருந்த மேலும் 3 பேர் உயிர்தப்பினர். அதே போன்ற சூழ்நிலையில் காணாமல் போன 52 வயது நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருடன் இருந்த இளையரைக் காணவில்லை.

3 மாதங்களில் பெய்யக்கூடிய மழை கடந்த வாரத்தில் சில மணி நேரத்துக்குள் கொட்டித்தீர்த்ததை அடுத்து வாகனங்கள், பாலங்கள், சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின.

வெள்ள நீர் வடியத் தொடங்கியிருக்கிறது. ஆனாலும் சில இடங்களில் வெள்ளம் நீடிக்கிறது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்