பிரான்சில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் : குறைந்தது 03 பேர் பலி!
பிரான்சின் வார் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குறைந்தது மூன்று பேர் இறந்தனர்.
கடற்கரையில் உள்ள லு லாவண்டோவில் 80 வயதுடைய ஒரு தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் காருடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் விடாபனில் ஒரு காரில் சிக்கிய மற்றொரு நபர் இறந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக 200 மீட்பு பணியாளர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.





