இலங்கையின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக முக்கிய நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் பல தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது.
திணைக்களத்தின் அறிவிப்பின்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கம் தற்போது வினாடிக்கு 16,250 கன அடி வீதத்தில் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே வாரியபொல, நிகவெரட்டிய, மஹாவ, கோபேகனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிகட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள பகுதிகள் வெள்ள அபாயத்தில் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எனவே, தெதுரு ஓயாவின் வெள்ளப்பெருக்கு பகுதிகள் வழியாகச் செல்லும் சாலைகளைப் பயன்படுத்தும் குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.