இலங்கையில் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

களு, களனி, ஜிங், நில்வளா கங்கை மற்றும் தெதுரு, மஹா, அத்தனகலு, கலா, மல்வத்து ஓயா என்பவற்றை அண்மித்த தாழ்நிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களிலும் பலத்த மழையுடனான காலநிலை தொடருமாயின் இந்த நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த ஆறுகளை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
(Visited 18 times, 1 visits today)