எரிமலையால் இரத்து செய்யப்பட்ட விமானங்கள் : இந்தோனேசியாவில் சிக்கி தவிக்கும் சுற்றுலாவாசிகள்!
இந்தோனேசியாவின் சுற்றுலாத் தீவான பாலிக்கு பயணப்பட இருந்து பல சர்வதேச விமானங்கள் இன்று (13.11) இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எரிமலை வெடிப்பு காரணமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் பல பயணிகள் விமா நிலையங்களில் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது.
விமான நிறுவனம் தங்கும் இடங்களை ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை என பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கித் தவித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன, ஆனால் சரியான எண்ணிக்கை கொடுக்கப்படவில்லை.
இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள புளோரஸ் என்ற தொலைதூரத் தீவில் உள்ள மவுண்ட் லெவோடோபி லக்கி லக்கி எரிமலை வெடித்து சிதறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)