தொழில்நுட்ப கோளாறு காரணமாக கிரேக்கத்தில் விமான சேவை பாதிப்பு
வான்வெளி வானொலி அலைவரிசைகள் பாதிக்கப்பட்டதால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கிரேக்க(Greek) விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
கிரீஸின்(Greece) முக்கிய விமான நிலையமான ஏதென்ஸில்(Athens) உள்ள எலெஃப்தெரியோஸ் வெனிசெலோஸில்(Eleftherios Venizelos), பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் நீண்ட வரிசையில் சிக்கித் தவித்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
“குறைந்தது இரண்டு மணிநேரம் எந்த விமானமும் தரையிறங்கவில்லை அல்லது புறப்படவில்லை” என்று ஏதென்ஸ் விமான நிலையத்தின் பத்திரிகை அலுவலகம் தெரிவித்துள்ளது.





