சிங்கப்பூரிலிருந்து சென்ற விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட விபரீதம் – 7 பேர் காயம்

சிங்கப்பூரிலிருந்து சென்ற Scoot விமானம் நடுவானில் ஆட்டங்கண்டதில் 7 பேர் காயமடைந்தனர்.
சிங்கப்பூரிலிருந்து சீனாவின் Guangzhou நகருக்கு நேற்றுக்காலை முன்தினம் காலை பறந்துகொண்டிருந்தபோது விமானம் கடுமையாக ஆட்டங்கண்டது.
விமானம் சிங்கப்பூரிலிருந்து காலை சுமார் 5.45 மணிக்குப் புறப்பட்டு, குவாங்சோ நகரில் காலை 9.10 மணியளவில் தரையிறங்கியது.
காயமடைந்த 4 பயணிகளுக்கும் 3 விமான ஊழியர்களுக்கும் உடனடி மருத்துவக்கவனிப்பு வழங்கப்பட்டதாக Scoot நிறுவனம் தெரிவித்தது.
நேற்றிரவு 8.30 மணி நிலவரப்படி அவர்களில் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் கூடுதல் பரிசோதனைக்காகச் சேர்க்கப்பட்டிருந்ததாகத் தகவல் அளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவும் உதவியும் வழங்கப்படும் என்று Scoot கூறியது.
(Visited 17 times, 1 visits today)