லண்டனில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணித்த விமானம் : நடுவானில் ஏற்பட்ட அவசரநிலை!

ஆஸ்திரேலியாவிலிருந்து லண்டனுக்குப் பயணித்த பிரிட்டிஷ் விமானம் நடுவானில் ஏற்பட்ட அவசரநிலை காரணமாக மாலத்தீவில் தரையிறங்கியுள்ளது.
பெர்த்தில் இருந்து ஹீத்ரோவுக்குச் செல்லும் குவாண்டாஸ் அதி-நீண்ட தூர விமானம் வழக்கமாக சுமார் 18 மணிநேரம் இடைவிடாது பயணிக்கும்,
ஆனால் பயணத்தை ஆரம்பித்த 08 மணிநேரத்தில் விமானத்தில் மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டதால், தரையிறக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து குறித்த விமானமானது மாலத்தீவின் சொர்க்கத் தீவுகளில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்தவர்கள் இப்போது மாலத்தீவில் ஒரு புதிய குழுவினருக்காகக் காத்திருக்கிறார்கள். மாலத்தீவுக்குச் சென்று சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு உதவ குவாண்டாஸ் ஏற்கனவே லண்டனில் இருந்து ஊழியர்களை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்பனடுகிறது.