இலங்கை

விமான தாமதங்கள்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பிரிவு- அரசாங்கம் பரிசீலனை

விமான தாமதங்கள் தொடர்பான தகவல்களை கையாள்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பிரிவொன்றை நிறுவுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

விமான சேவைகள் தாமதம் தொடர்பான முறைப்பாடுகளை ஆராய்வதற்காக விமான போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விஜயம் செய்தார்.

இந்த விஜயத்தின் போது, ​​விமான நிலைய வளாகத்தில், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களின் அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட பிரிவொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் ஹேரத் வலியுறுத்தினார்.

24/7 செயல்படும் இந்த சிறப்புப் பிரிவு, விமான தாமதங்கள் குறித்த உடனடி அறிவிப்புகளை பயணிகளுக்கு வழங்குவதோடு, தாமதத்தின் போது பயணிகளுக்கு அதிகபட்ச வசதிகளையும் வழங்கும்.

விமான தாமதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அமைச்சர் விஜித ஹேரத் பணிப்புரை விடுத்துள்ளார்

(Visited 61 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!