கடலில் மிதந்து வந்த மதுபானத்தை உட்கொண்ட ஐந்து இலங்கையர்கள் பலி!

கடலில் மிதந்த போத்தலில் இருந்து மதுபானம் என நினைத்து விஷ திரவத்தை குடித்த பல நாள் மீன்பிடி கப்பலான “டெவன் 5” மீன்பிடி கப்பலில் இருந்த ஆறு மீனவர்களில் மேலும் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
டெவோன் 5 கப்பலில் இருந்த ஆபத்தான நிலையில் இருந்த இருவர் சிங்கப்பூர் வணிகக் கப்பல் மூலம் இன்று (30) மீட்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.
(Visited 17 times, 1 visits today)