சத்தீஸ்கரில் உணவு விஷத்தால் இரண்டு மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு
சத்தீஸ்கர் (Chhattisgarh) மாநிலம் நாராயண்பூர் (Narayanpur) மாவட்டத்தின் டுங்கா (Dunga) கிராமத்தில் இறுதிச் சடங்கிற்குப் பிந்தைய விருந்தில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்ட ஐந்து கிராமவாசிகள் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு மாதக் குழந்தை, 25 வயது புதாரி, 24 வயது புதாராம், 45 வயது லக்கே மற்றும் 25 வயது ஊர்மிளா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இறப்பதற்கு முன்பு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளைக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு அக்டோபர் 21ம் திகதி கிராமத்தில் ஒரு சுகாதார முகாம் நடத்தப்பட்டுள்ளது, அங்கு 25 கிராமவாசிகள் பரிசோதிக்கப்பட்டனர். இவர்களில், இருவருக்கு மலேரியாவும், 20 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும், மூன்று பேருக்கு பிற நோய்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.





