பாகிஸ்தானின் பலுசிஸ்தான் சந்தையில் வெடிகுண்டு வெடித்ததில் ஐந்து பேர் பலி

பாகிஸ்தானின் பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தின் குஜ்தார் மாவட்டத்தில் நடந்த வெடிகுண்டு வெடிப்பில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த ரிமோட் கருவி மூலம் இயங்கும் குண்டு வெடித்ததாக காவல் நிலைய அதிகாரி பஹாவல் கான் பிந்த்ரானி தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் இருவரின் நிலை மோசமாக இருப்பதாகவும், ஐந்து உடல்கள் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார அதிகாரி ரபிக் சசோலி தெரிவித்தார்.
வெடிகுண்டு அகற்றும் படை சம்பவ இடத்தில் இருந்ததாகவும், சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருவதாகவும் கான் தெரிவித்தார்.
(Visited 1 times, 1 visits today)