யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம், சுன்னாகம், தவடி பகுதியில் உள்ள வீடொன்றிற்கு வலுக்கட்டாயமாக நுழைந்த சிலர் பெற்றோல் குண்டை வீசியதில் வீட்டினுள் இருந்த 5 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (16) இடம்பெற்ற சம்பவத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகள் மற்றும் மகன் ஆகியோர் தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் குறித்த குடும்பத்தைச் சேர்ந்த மகள் ஒருவர் காதல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், மேற்படி இளைஞன் தனது நண்பர்களுடன் தகராறு காரணமாக வீட்டின் மீது பெற்றோல் குண்டினால் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீட்டிற்கு தீ வைத்த சந்தேகநபர்கள் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியையும் தாக்கி வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.