ஆசியா

கேமி புயலால் கிழக்குச் சீனாவில் ஐவர் பலி, 300,000 பேர் இடம் பெயர்ந்தனர்

கேமி புயலால் கிழக்குச் சீனாவில் கிட்டத்தட்ட 300,000 பேர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.அத்துடன்,சீனாவின் கிழக்குப் பகுதி முழுவதிலும் பொதுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமி புயல் தைவானில் கனமழை பொழியக் காரணமாக இருந்தது என்றும் அங்கு 5 பேர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.செவ்வாய்க்கிழமை (ஜூலை 25ஆம் திகதி) தைவானைத் தாக்கிய கேமி புயல் கடந்த எட்டு ஆண்டுகளில் அந்நாட்டை தாக்கிய மிகக் கடுமையான புயல் என்று கூறப்படுகிறது.

தைவான் வரும் முன்னர் பிலிப்பீன்ஸ் நாட்டைப் புரட்டி எடுத்த கேமி புயல் அங்கு பருவகால மழையுடன் சேர்ந்து பிலிப்பீன்ஸை தாக்கியதால் வெள்ளம், நிலச்சரிவு என அந்நாட்டை வாட்டியதில் 30 பேர் இயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்பில் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் பிலிப்பீன்ஸ் செஞ்சிலுவைச் சங்கத்தின் அத்தியாவசிய நிவாரணப் பணிகளுக்கு உதவும் பொருட்டு அதற்கு அமெரிக்க டொலர் 50,000 (S$67,000) தருவதாக உறுதி அளித்துள்ளதாக சங்கத்தின் ஜூலை 26ஆம் திகதியிட்ட அறிக்கை தெரிவித்தது.

இந்தக் கோடை காலத்தில் சீனா கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கனமழை பொழிவது ஒருபுறமிருக்க, வடக்கில் வெப்பம் அலை அலையாக தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

சீனா உலகில் பசுமை எரிவாயுவை அதிக அளவில் வெளியேற்றும் நாடு. இது பருவநிலை மாற்றத்தைத் தூண்டி அதனால் தீவிர பருவநிலை மாற்றம் அடிக்கடி நேர்கிறது என்றும் அந்த மாற்றம் மிகக் கடுமையாக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கேமி புயல் கனமழைப் பொழிவை ஏற்படுத்தும் என்றும் அது வெள்ளப் பெருக்கு ஏற்படக் காரணமாக இருக்கும் என்றும் சீன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஃபூஜியான் மாநிலத்தில் 290,000க்கும் அதிகமானோர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அங்குள்ள சில நகரங்களில் பொதுப் போக்குவரத்து, அலுவலகங்கள், பள்ளிகள், விற்பனைச் சந்தைகள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.அத்துடன், அந்த மாநிலத்தின் ஒன்பது மில்லியன் மக்கள் வாழும் வென்சாவ் நகருக்கு புயல் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 7,000 பேர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகத் தவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கேமி புயல் மத்திய ஜியாங்ஸி, ஹெனான் மாநிலங்களிலும் கனமழையைக் கொண்டுவரும் என்று சொல்லப்படுகிறது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!