இந்தியா செய்தி

திருச்சியில் ஆயுதங்களை காட்டி ஓரிணை சேர்க்கைக்கு வற்புறுத்திய ஐவர் கைது

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, மைப்பாறை கிராமத்தைச் சேர்ந்த முப்புட்டாதி என்பவரது மகன் காளிராஜ்(24).

தனது நண்பரின் தம்பி கவிமணி என்பவர் வாகனவிபத்தில் காயம்பட்டு, திருச்சி மாவட்டம், இருங்களுரில் உள்ள SRM மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவரை பார்த்துவிட்டு, தனது வீட்டிற்கு செல்வதற்காக SRM பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபர், தனது பெயர் வசந்த் என்றும், காளிராஜிடம் நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என கேட்டதற்கு திருச்சிக்கு செல்ல வேண்டும் என கூறவே, அவரிடம் உதவி செய்கிறேன் எனக்கூறி, மேற்படி வசந்த் அவரது வாகனத்தில் காளிராஜை ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி சென்ற போது தனது விட்டிற்கு சென்றவுடன் திரும்பி வந்துவிடாலம் என கூறி இருங்களுர் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு கதவை மூடி தாழ்ப்பாள் போட்டுள்ளார்.

அப்போது அங்கு மது, கஞ்சா போதையில் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த கவியரசன், யுவராஜ், ரவி போஸ்கோ மற்றும் அய்யனார் ஆகியோர்களை வசந்த் அறிமுகப்படுத்தியதாக தெரிய வருகிறது. சிறிது நேரத்தில், மேற்படி எதிரிகள் அனைவரும், தங்களுடன் இயற்கைக்கு மாறாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுமாறு காளிராஜ்-ஐ வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால் காளிராஜ் மறுத்துள்ளார். ஆனால் எதிரிகள் அதனை பொருட்படுத்தாமல், பயங்கர ஆயுதங்களைக் காட்டி மிரட்டியும், அவரை வலுக்கட்டாயமாக தாக்கியும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

அதன் பின்னர், காளிராஜிடம் அவரது சாதி குறித்து விசாரித்து, அவரது ஜாதிப் பெயரைக் கூறி இழிவான வார்த்தைகளால் திட்டி, பயங்கர ஆயுதங்களை காட்டி காளிராஜிடம் இருந்த செல்போன், மற்றும் ரூபாய் 1100. ஆகியவற்றினை பறித்துக்கொண்டனர்.

இந்நிலையில் மேற்படி காளிராஜ், எதிரிகளிடம் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சி அழுதபோது, இங்கு நடத்த சம்பவங்களை வெளியே கூறினால் உன்னை காலி செய்து விடுவோம் எனக்கூறி வசந்த் தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி மெயின் ரோட்டில் கொண்டு வந்து இறக்கி விட்டுவிட்டு சென்று விட்டார்.

இந்நிலையில் மேற்படி காளிராஜ் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று டீக்கடைகாரரிடம் போன் வாங்கி திருச்சி மாவட்ட காவல் உதவி எண்ணுக்கு போன் செய்து நடந்த சம்பவத்தினை கூறிவிட்டு, மேற்படி எதிரிகள் தாக்கியதன் காரணமாக தனக்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக காளிராஜிடம் சமயபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 5வாலிபர்களையும் உடனடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content