யாழ்ப்பாணத்தில் மீன்பிடி படகுகளுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதி பாலயடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மீன்பிடி படகுகள் சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
பாலயடி பகுதி மீனவர்கள் கடலில் இருந்து வந்து நிறுத்திவிட்டு வீடுகளுக்குச் சென்றதை அடுத்து சிலர் இரண்டு படகுகளுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.
தீயினால் ஒரு படகு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் மற்றுமொரு படகு பகுதியளவிலும் எரிந்து நாசமாகியுள்ளது.
எவ்வாறாயினும் தீயினால் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு படகுகளும் பழுதுபார்க்க முடியாத நிலையில் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் தீ விபத்து குறித்து மருதங்கேணி பொலிஸாரிடம் மீனவர்கள் முறைப்பாடு செய்ததோடு தீ விபத்து தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)