ஆப்கானிஸ்தானுக்கான முதல் தாலிபான் தூதர் இந்தியா வருகை!
தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட முதல் தூதர் தனது கடமைகளை பொறுப்பேற்பதற்காக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாலிபானின் மூத்த உறுப்பினரான முஃப்தி நூர் அகமது நூர் (Mufti Noor Ahmad Noor) ஆப்கானிஸ்தானுக்கான இந்தியாவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் இந்திாயாவிற்கு வருகை தந்த அவர், தூதரகத்தில் இடம்பெறும் உள்விவகாரங்களை தொடர்ந்து உத்தியோகப்பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நூர் முன்பு ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் முதல் அரசியல் துறையின் இயக்குநர் ஜெனரலாக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




