பறவைக் காய்ச்சலால் அமெரிக்காவில் பதிவான முதல் மனித மரணம்
அமெரிக்காவில் இதுவரை பறவை காய்ச்சலுக்கு யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லாத நிலையில், தற்போது முதல் முறையாக ஒருவர் பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள லூசியான மாகாணத்தைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு சமீபத்தில் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக லூசியானா மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. காட்டு பறவைகள் மற்றும் வளர்ப்பு பறவைகளை அவர் வளர்த்து வந்ததாகவும், அதனால் தான் அவருக்கு பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)