விமானப் பயணிகளின் எண்ணிக்கையில் முதன்முறையாக ஏற்படவுள்ள அதிகரிப்பு
அடுத்த ஆண்டு விமானம் வழி பயணம் செய்வோரின் எண்ணிக்கை முதன்முறையாக 5 பில்லியனைத் தாண்டக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
விமானப் போக்குவரத்துச் சங்கம், உலகளவில் 5.2 விமானப் பயணிகளை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு சுமார் 40 மில்லியன் விமானச் சேவைகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதனால் பலருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சங்கம் தெரிவித்தது.
விமானத்துறையின் வருவாய் 1 டிரில்லியன் (trillion) அமெரிக்க டொலரை மிஞ்சும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 3 times, 1 visits today)