ஐரோப்பா செய்தி

நெதர்லாந்தில் முதல் முறையாக குரங்கு அம்மை நோயால் ஒருவர் பாதிப்பு

நெதர்லாந்தில் (Netherland) எளிதில் பரவக்கூடிய mpox வகை வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரம், நலன்புரி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜான் அந்தோனி ப்ரூய்ன் (Jan Anthony Bruyn) தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 17ம் தேதி அடையாளம் காணப்பட்ட இந்த mpox 1b வகையான தொற்று நாட்டில் கண்டறியப்பட்ட முதல் வழக்கு என்று அமைச்சர் ஜான் அந்தோனி ப்ரூய்ன் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபருக்கு mpox தடுப்பூசி போடப்பட்டு இல்லை என்றும், அவர் சமீபத்தில் வெளிநாட்டு பயணங்கள் செய்யாதவர் என்றும் தேசிய பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனம் (RIVM) தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது. இந்த நோய் 1958ம் ஆண்டு முதன் முதலில் ஆய்வகத்தில் உள்ள குரங்குகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின் 1970ம் ஆண்டு முதன் முதலில் குரங்கு அம்மை மனிதர்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குரங்கு அம்மை, சின்னம்மையுடன் தொடர்புடையது.

இந்த நோயினால் பாதிக்கப்படுபவரின் முகத்தில் ஒவ்வாமையினால் சிகப்பு புள்ளிகள் தோன்றி அரிப்பு ஏற்படும்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!