அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் பிரசாரக் கூட்டம் – டிரம்ப்பை சீண்டிய கமலா
அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் முதல் பிரசாரக் கூட்டத்திலேயே முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை சீண்டியுள்ளார் என தெரியவந்துள்ளது.
முன்னாள் வழக்கறிஞருக்கும், குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவருக்கும் இடையே நவம்பர் தேர்தல் நடக்கவுள்ளதாகத் ஹாரிஸ் கூறினார்.
விரைவில் டிரம்ப்புடன் ஹாரிஸ் நேரடி விவாதத்தில் பங்கேற்பார் என்று தெரிகிறது.
தற்போது அவர் விஸ்கான்சின் மாநிலத்தின் மில்வாக்கி (Milwaukee) நகரில் பிரசாரம் செய்கிறார்.
தேர்தலில் வெல்ல அந்த மாநிலம் முக்கியமான போட்டிக்களமாக உள்ளது. சென்ற தேர்தலில் அங்கு டிரம்ப்பை விடக் கூடுதலாக 20,000 வாக்குகள் பெற்றார் பைடன்.
நேரடி விவாதம் நடத்தப்பட்டால் டிரம்ப்புக்கு எதிரான வாதங்களை முன்வைக்கத் ஹாரிஸுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கும். அவருடன் ஒன்றுக்கு மேற்பட்ட முறை நேரடி விவாதம் நடத்தத் தயார் என்று டிரம்ப் கூறினார்.