அரசியல் இலங்கை செய்தி

“முதலில் ஜனாதிபதி பதவி விலகட்டும்” – நாமல் சர்ச்சை கருத்து

“ முதலில் ஜனாதிபதியை பதவி விலகச் சொல்லுங்கள், பிறகு ஆட்சியை பொறுப்பேற்பது பற்றி கதைக்கலாம்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa எம்.பி. தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்றிரவு விசேட ஆன்மீக வழிபாடு இடம்பெற்றது. இந்நிகழ்வின் பின்னர் நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.

இதன்போது அவரிடம் “ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவி விலகினால் நாட்டை பொறுப்பேற்க நாமல் ராஜபக்ச தயார்.” எனக் கூறப்படுவது தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு சிரித்தப்படியே நாமல் ராஜபக்ச பதிலளித்துள்ளார்.

“முதலில் பதவி விலகச் சொல்லுங்கள்..” – என்றார்.
அவ்வாறு விலகினால் பதவி ஏற்க தயாரா என நாமலிடம் மீண்டும் கௌ;வி எழுப்பட்டது.

“முதலில் பதவி விலகச் சொல்லுங்கள்….” என மீண்டும் பதிலளித்தார்.

ஜனாதிபதிக்கு முன்னர் பிரதமர் பதவி விலக வேண்டும். கல்விக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு சம்பந்தமாகவே அவர் விலக வேண்டும். பிறகு ஜனாதிபதி தொடர்பில் பார்த்துக்கொள்வோம்.

அதிகாரிகள்மீது பொறுப்பை சுமத்தி சரிவராது, பிரதமரே பொறுப்பு கூறவேண்டும்.” – என்றார் நாமல்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!