மெக்சிகோவில் (Mexico) தீ விபத்து – குழந்தைகள் உள்பட 23 பேர் பலி!
மெக்சிகோவில் (Mexico)கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோனோரா (Sonora) மாநிலத்தின் தலைநகரான ஹெர்மோசில்லோ (Hermosillo) நகர மையத்தில் நேற்று இந்த தீ விபத்து ஏற்பட்டது.
காயமடைந்தவர்கள் ஹெர்மோசில்லோவில் (Hermosillo) உள்ள ஆறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளில் “நச்சு வாயுக்களை உள்ளிழுத்ததால்” இறப்புகள் ஏற்பட்டதாக ஆளுனர் சலாஸ் சாவேஸ் (Salas Chávez) கூறியுள்ளார்.
தீ விபத்து தொடர்பான காரணங்களை கண்டறிய அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.





