பாங்காகில் ஏற்பட்ட தீ விபத்து – பல உயிரினங்கள் பலி

பாங்காக்கில் உள்ள பெரிய கால்நடை சந்தையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (11) காலை ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், 1000க்கும் மேற்பட்ட ஊர்வன மற்றும் விற்பனைக்காக இருந்த செல்லப்பிராணிகள் தீயில் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சந்தையின் 1,300 சதுர மீட்டர் பரப்பளவை எரித்ததில், நாய்கள், பூனைகள், பறவைகள், பாம்புகள், சிலந்திகள் மற்றும் மீன்கள் உட்பட 1,000 க்கும் மேற்பட்ட விலங்குகள் இறந்ததாக பாங்காக் ஆளுநர் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
சுமார் 118 கடைகள் தீயில் சிக்கியதுடன், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு பொலிசார் கண்டறிந்துள்ளனர்.
(Visited 6 times, 1 visits today)