இலங்கை காசல்ரி நீர்த்தேக்கத்தை அண்டிய வனப்பகுதியில் தீப்பரவல்!

காசல்ரி நீர்த்தேக்கத்தை அண்டியுள்ள காசல்ரி வனப்பகுதியில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இத்தீப்பரவல் காரணமாக பாரியளவான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பகுதியில் மனிதர்களால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக காசல்ரி நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 7 times, 1 visits today)