இந்தியா

ஜெய்ப்பூரில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு நேற்று இரவு குழந்தைகள் இருந்த இரண்டு வார்டுகளில் இருந்து புகை வந்தது. இதனைக் கவனித்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த வார்டுகளில் இருந்த 30 குழந்தைகளையும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் தீயை அணைத்தனர். குழந்தைகள் இருந்த வார்டு சமீபத்தில் கட்டப்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்தக் குழு அமைக்கப்பட்டு தவறுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கைலாஷ் மீனா தெரிவித்தார். இந்த சம்பவத்தில் உயிர்ச் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!