பாங்காக்கின் பிரபல சுற்றுலா தளத்தில் தீ விபத்து : மூவர் உயிரிழப்பு!
பிரபல சுற்றுலாத் தலமான பாங்காக்கின் காவ் சான் சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வெளிநாட்டவர்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
ஆறு மாடிகளைக் கொண்ட எம்பர் ஹோட்டலின் 5வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறுதியில் தீ அணைக்கப்பட்டு தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.





