தென் கொரிய கட்டுமான தளத்தில் தீ விபத்து : அதிர்ச்சியில் உயிரிழந்த 06 பேர்!

தென் கொரிய கட்டுமான தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சம்பவ இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் கொரிய நகரமான பூசானில் கிஜாங்-கன்னில் உள்ள பனியன் ட்ரீ ஹோட்டல் கட்டுமான இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
மாரடைப்பு ஏற்பட்டு ஆறு பேர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பின்னர் இறந்துவிட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஏழு பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளது.
தீவிபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)