உக்ரைனுக்கு 109 மில்லியன் யூரோக்கள் இராணுவ உதவி வழங்கும் பின்லாந்து!

உக்ரைனுக்கு மேலும் ராணுவ உபகரணங்களை வழங்க பின்லாந்து ஒப்புக்கொண்டுள்ளது.
ரஷ்யாவுடன் கிழக்கு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பின்லாந்து, 109 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான இராணுவ உபகரணங்களை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த உபகரணங்களில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் அடங்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், “செயல்பாட்டுக் காரணங்களுக்காகவும், உதவி பாதுகாப்பாக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும்” கூடுதல் விவரங்களை வழங்க மறுத்துள்ளது.
பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பதிலளிக்கும் விதமாக பின்லாந்து ஏப்ரல் மாதம் நேட்டோவில் இணைந்தது.
(Visited 10 times, 1 visits today)