இலங்கை செய்தி

காணாமல் போன சிறுமிகள் கண்டுப்பிடிப்பு

சுமார் ஒரு வார காலமாக காணாமல் போயிருந்த 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் கிண்ணியாகலை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

களனி – மீகாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் இவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள் (2) இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியாகலை பொல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய அஷானி வஷ்மிகா மற்றும் பவீஷா நெத்மினி ஆகிய இருவரும் காணாமல் போயிருந்தனர்.

பவீஷா பாடசாலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு கடந்த 15ம் திகதி ஆஷானியின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அஷானியின் தந்தை கொழும்பில் பணிபுரிகிறார், அவர் பாட்டி வீட்டில் வசித்து வருகின்றார்.

இந்த வீட்டில் பாட்டியை பராமரித்து வரும் அஷானி, கடந்த 15ம் திகதி காலை வகுப்புக்கு செல்வதாக கூறி வீட்டிற்கு வந்த பவீஷாவுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

ஆனால் இவ்வாறு சென்ற சிறுமிகள் திரும்பி வராததையடுத்து பவீஷாவின் பெற்றோரும் அஷானியின் பாட்டியும் இங்கினியாகல பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் இந்த இரண்டு சிறுமிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!