யாழில் நிதி மோசடி – மொட்டுக் கட்சி உறுப்பினர் கைது

வெளிநாடுகளில் இருந்து யாழ்ப்பாண மக்களுக்கு பணம் கொண்டு வரும் சட்டவிரோத ‘உண்டியல்’ மோசடியில் ஈடுபட்டு யாழ்ப்பாண மக்களிடம் 1,090,000 ரூபாவை மோசடி செய்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட அமைப்பாளர் பொலிஸாரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். .
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரதேசவாசிகள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் வெளிநாடுகளில் பணிபுரியும் நபர்களின் வரிப்பணத்தை தவிர்ப்பதற்காக அன்டியல் முறையின் கீழ் தனது நண்பர்களுக்கு அனுப்பிய பாரியளவிலான பணத்தை மோசடியான முறையில் பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
(Visited 6 times, 1 visits today)