புட்டினுடன் தொடர்புடைய மேற்கில் நிதிப் பாய்ச்சல்கள்: விசாரணைக்கு அழைப்பு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தொடர்புடைய மேற்கில் உள்ள நிதிப் பாய்ச்சல்களை விசாரிக்குமாறு ஐரோப்பிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை மறைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மனைவி யூலியா நவல்னாயா வலியுறுத்தியுள்ளார் .
நவல்னயா தனது கணவர் ரஷ்ய தண்டனைக் காலனியில் திடீரென இறந்த 12 நாட்களுக்குப் பிறகு ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.
“புடின் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் கும்பலின் தலைவர். நீங்களும் நாங்கள் அனைவரும் குற்றவாளி கும்பலை எதிர்த்துப் போராட வேண்டும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 12 times, 1 visits today)