ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகள் ஊடாக உக்ரைன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி.
ரஷ்யாவின் முழு அளவிலான போருக்குப் பின்னர், சுமார் நான்கு ஆண்டுகளாக உக்ரைன் தனது இராணுவத்தையும் பொருளாதாரத்தையும்
நடத்தி செல்வதில் நிதி சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம், இரண்டு ஆண்டுகளுக்குள் உக்ரைனுக்கு €135.7 பில்லியன் நிதி இடைவெளியை நிரப்ப முடக்கப்பட்ட
ரஷ்ய சொத்துகளைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
பெல்ஜிய வங்கியான Euroclear இல் மட்டும் ரஷ்யாவின் €185 பில்லியன் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
ரஷ்யா, EU வின் திட்டத்தை கொள்ளைச் செயல்கள் என எச்சரிப்பதுடன் Euroclear மீது மாஸ்கோ நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
ரஷ்யா அழித்ததை மீண்டும் கட்டியெழுப்ப இந்த சொத்துகளை பயன்படுத்துவது நியாயமானது என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, கூறியுள்ளார்.
இந்த பணம் உக்ரைனுக்கு எதிர்கால ரஷ்ய தாக்குதல்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க உதவும் என ஜெர்மனும் தெரிவித்துள்ளது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியம், இந்த சொத்துகளை “இழப்பீட்டுக் கடன்” என கூறுகிறது.




