அரசியல் இலங்கை செய்தி

புதிய கணக்காய்வாளர் நாயகம் தொடர்பில் 03 ஆம் திகதி இறுதி முடிவு!

புதிய கணக்காய்வாளர் நாயகம் Auditor General தொடர்பில் எதிர்வரும் 3 ஆம் திகதி தீர்மானம் எடுக்கப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க Bimal Ratnayake தெரிவித்தார்.

எதிர்வரும் 03 ஆம் திகதி அரசமைப்பு பேரவை Constituent Assembly கூடவுள்ளது எனவும் அவர் கூறினார்.

புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியால் நான்கு தடவைகள் அனுப்பட்ட பெயர்களை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.

இந்நிலையில் புதிய பெயரை ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.
கணக்காய்வாளர் நாயகமாக பதவி வகித்த டிபிள்யூ.பி.சீ, விக்ரமரத்ன 2025 ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார். அன்று முதல் இதுவரையில் புதிய கணக்காய்வாளர் நாயகம் தெரிவுசெய்யப்படவில்லை.

பதில் கணக்காய்வாளர் நாயகமாக செயல்பட்டவரின் பதவி காலமும் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தகுதியான ஒருவரை பிரேரிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அரசியலமைப்பு சபை பெப்ரவரி 3 ஆம் திகதி கூடுகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!