தெற்கு ஏமனில் அதிகாரப் போட்டி – ஹத்ரமவுட்டில் படைகள் மோதல்
சவூதி அரேபியாவின் எல்லையை அண்மித்துள்ள ஏமனின் ஹத்ரமவுட் மாகாணத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் சவூதி ஆதரவு பெற்ற ஆளுநருக்கு விசுவாசமான படைகளுக்கும், பிரிவினைவாத தெற்கு இடைக்கால கவுன்சிலுக்கு (STC) ஆதரவான படைகளுக்கும் இடையே மோதல் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவூதி அரேபியா எல்லைக்கு அருகே தங்களது படைகள் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டதாக STC குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்கு பதிலளித்த ஹத்ரமவுட் மாகாண ஆளுநர் சலீம் அல்-கான்பாஷி, STC கட்டுப்பாட்டில் உள்ள இராணுவ தளங்களை மீட்கும் நடவடிக்கைகள் தெற்கு ஏமனில் அமைதியையும் ஒழுங்கையும் மீட்டெடுக்கவே மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறினார்.
இந்த சம்பவம், கடந்த மாதம் சவூதி அரேபியாவும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசாங்கமும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் STC க்கு ஆயுதங்கள் வழங்கி, தெற்கு ஏமனில் உள்ள ஹத்ரமவுட் மற்றும் அல்-மஹ்ரா மாகாணங்களின் சில பகுதிகளை கைப்பற்ற ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டிய சில நாட்களுக்குப் பிறகு ஏற்பட்டுள்ளது.





