போலந்தில் பயிற்சியின் போது விபத்துக்குள்ளான போர் விமானம் – விமானி மரணம்

மத்திய போலந்தின் ராடோமில் ஒரு விமான கண்காட்சிக்கான ஒத்திகையின் போது போலந்து விமானப்படையின் F-16 போர் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது, இதில் விமானி இறந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
“போலந்து இராணுவ விமானி F-16 விமானம் விபத்தில் இறந்தார் – அவர் எப்போதும் தனது நாட்டிற்கு அர்ப்பணிப்புடனும் மிகுந்த தைரியத்துடனும் சேவை செய்த அதிகாரி. அவரது நினைவாக நான் அஞ்சலி செலுத்துகிறேன்,” என்று பாதுகாப்பு அமைச்சர் Wladyslaw Kosiniak-Kamysz விபத்து நடந்த இடத்திற்கு வந்த பிறகு X இல் பதிவிட்டுள்ளார்.
போஸ்னான் அருகே உள்ள 31வது தந்திரோபாய விமான தளத்திலிருந்து வந்த ஒரு விமானம் விபத்தில் சிக்கியதாகவும், அருகில் இருந்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் ஆயுதப்படைகளின் பொது கட்டளை தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)