இலங்கையில் ஐம்பது வீதமான பெண்கள் உடல் பருமனால் அவதி
இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவகத்தின் கூற்றுப்படி, இந்நாட்டில் சுமார் 50 வீதமான பெண்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன் தலைவர் கலாநிதி திமதி விக்ரமசேகர கூறுகையில், குழந்தைகளிடையேயும் உடல் பருமன் அதிகரித்து வருகிறது.
இந்நாட்டில் ஊட்டச் சத்து குறைவடைந்துள்ள போதிலும், அதீத போஷாக்கின்மை அதிகரித்துள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“இந்த உடல் பருமன் விஷயத்தை நாங்கள் மறந்துவிட்டோம். நாங்கள் எப்போதும் ஊட்டச்சத்து குறைபாட்டின் மீது கவனம் செலுத்துகிறோம்.
ஆனால் குழந்தை பருவ உடல் பருமன் அதிகரித்து வருகிறது. ஏறக்குறைய 50% பெண்கள் அதிக எடை மற்றும் பருமனானவர்கள்.
இந்நிலையல், இலங்கைக்கு ஒரு புதிய ஆராய்ச்சி தரவு அமைப்பு தேவை.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 4 times, 1 visits today)