இலங்கை – நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை!

இலங்கை – நெல் விவசாயிகளுக்கு உர மானியம் ஹெக்டேருக்கு ரூ.25,000 வழங்குவதில் சிக்கல் இல்லை என விவசாய அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம். விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க விவசாய அமைச்சுக்கு விஜயம் செய்து அனைத்து அதிகாரிகளுடனும் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலை நடாத்திய பின்னர் எம். பி. என். எம். விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், உர மானியம் 25,000 ரூபாய் வழங்குவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. முன்பணமாக 15,000 ரூபாய் செலுத்தி, 10,000 ரூபாய் தேர்தல் முடிந்ததும் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். 25,000 ரூபாய் கூட கொடுப்பதில் சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை.”எனக் கூறினார்.
இதன்வேளை உரங்களை கொள்வனவு செய்யும் போது QR குறியீட்டு முறையை தயார் செய்யுமாறு விவசாயிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.