சீனாவில் 7 பேரைக் கொன்ற பெண் தொடர் கொலையாளிக்கு மரண தண்டனை
சீனாவின் பிரபல பெண் தொடர் கொலையாளி லாவோ ரோங்ஷி, கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நான்சாங்கில் மரண தண்டனையால் தூக்கிலிடப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஜியாங்சி உயர் மக்கள் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் 49 வயதான பெண்ணுக்கு தனது குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் உரிமை வழங்கப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1996 மற்றும் 1999 க்கு இடையில், கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் ஏழு பேரைக் கொடூரமாகக் கொலை செய்தல் உள்ளிட்ட தொடர் குற்றங்களில் ஈடுபட்டு 20 ஆண்டுகளாக லாவோ ரோங்சி தப்பி ஓடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் நவம்பர் 28, 2019 அன்று புஜியான் மாகாணத்தில் உள்ள ஜியாமென் நகரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
ஜியாங்சி மாகாண உயர் மக்கள் நீதிமன்றம் கடந்த ஆண்டு அவரது மேல்முறையீட்டை விசாரித்ததால் அவரது மரண தண்டனையை உறுதி செய்தது.