வரிசையாக கொல்லப்பட்டு வந்த பெண் மேலாளர்கள்; வெளிவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை

பிரான்சில் 2021ஆம் ஆண்டு, தொடர்ச்சியாக மூன்று பெண் மேலாளர்கள் கொல்லப்பட்ட வழக்கு French HR murders என்றே அழைக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 26ஆம் திகதி, கிழக்கு பிரான்சிலுள்ள Alsace என்ற இடத்தில் மனிதவள மேலாளரான Estelle Luce என்பவர், பணி முடித்து வீட்டுக்குப் புறப்படும்போது, கார் பார்க்கிங்கில் மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்டார்.சிறிது நேரத்திற்குப் பின், 50 கிலோமீற்றர் தொலைவில், Bertrand Meichel என்னும் மனிதவள மேலாளர் வீட்டுக்கு பீட்சா டெலிவரி செய்ய வந்த நபர் அவரை துப்பாக்கியால் சுட்டார். ஆனால், அந்தப் பெண் உயிர் பிழைத்துவிட்டார்.
இரண்டு நாட்களுக்குப் பின் 500 கிலோமீற்றருக்கு தெற்கே அமைந்துள்ள உள்ளூர் பணி மையம் ஒன்றிற்குள் நுழைந்த மாஸ்க் அணிந்த ஒருவர், Patricia Pasquion என்னும் பெண் மேலாளரை சுட்டுக் கொன்றார்.சில நிமிடங்களுக்குள், அருகிலுள்ள மற்றொரு நிறுவனத்தின் மனிதவள மேலாளரான Géraldine Caclin என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.அந்த பெண்கள் நால்வரையும் துப்பாக்கியால் சுட்டவர் பயன்படுத்திய காரின் நம்பர் பிளேட்டை வைத்து பொலிசார் குற்றவாளியைப் பிடித்தார்கள். அவரது பெயர் கேபிரியல் (48) என தெரியவந்தது.
பொறியாளரான கேபிரியல், சுமார் 14 ஆண்டுகளுக்கு முன் தான் பணி செய்த இடங்களிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட அந்தப் பெண்களில் சிலர் காரணமாக இருந்துள்ளார்கள். அவர் பணிக்கு விண்ணப்பித்தபோதும் சிலர் அவரை பணிக்கு அழைக்கவில்லையாம். பல ஆண்டுகளாக, வன்மம் வைத்து அந்தப் பெண்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்த கேப்ரியல், ஒரு நாள் அவர்களை சுட்டுக் கொன்று பழி தீர்த்துக்கொண்டுள்ளார்.
நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோதும், நீதிபதிகளையும் அதிகாரிகளையும் குற்றம் சாட்டிய கேப்ரியல், தான் பணி இழந்தது தொடர்பாக ஏராளமான புகார்களை அனுப்பியும் அதற்கு நீங்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறியதுடன், எனது இன்றைய நிலைக்கு நீங்கள்தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.கேப்ரியல் மீது மூன்று கொலைக்குற்றச்சாட்டுகளும், ஒரு கொலை முயற்சிக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.