இந்திய கிரிக்கெட் வீரருக்கு எதிராக இனவெறி சொல்லை பயன்படுத்திய பெண் வர்ணனையாளர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணியில் பும்ராவின் பந்துவீச்சு மட்டும்தான் சிறப்பாக செயல்பட்டது.
இந்த சூழலில் பும்ரா ஐந்து விக்கெட் எடுத்த போது முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையும் பெண் வர்ணனையாளருமான ஈஷா குகா இனவெறி சொல் ஒன்றை பயன்படுத்தியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இஷா குகா, பும்ராவை Most valuable player என்று தெரிவித்தார். அதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என பேசிய இசா குஹா, most valuable Primate என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்.
இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பிரைமட் என்றால் குரங்கு இனத்தை சேர்ந்த ஒரு உயிரினத்தை குறிக்கும். இதனால் இஷா குகா பும்ராவை இன வெறியுடன் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து இன்றைய ஆட்டம் ஆரம்பமாகும் போது வர்ணனையாளர் ஈஷா குகா சம்பவத்திற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.