சிங்கப்பூரில் நாளை முதல் அதிகரிக்கும் கட்டணம்!

சிங்கப்பூரில் நாளை முதல் பேருந்து, ரயில் சேவைகளுக்கான கட்டணம் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரியவர்கள் கூடுதலாக 10 காசு செலுத்தவேண்டும். சலுகைக் கட்டண அட்டை வைத்திருக்கும் மாணவர்கள், மூத்தோர், உடற்குறையுள்ளோர் ஆகியோர் கூடுதலாக 4 காசு செலுத்தவேண்டும்.
கட்டணம் 6 விழுக்காடு உயர்த்தப்படுமென பொதுப் போக்குவரத்து மன்றம் செப்டம்பரில் சொன்னது.
கடந்த ஆண்டு சிங்கப்பூர் மக்களின் சம்பள அதிகரிப்பு, அடிப்படைப் பணவீக்கம் ஆகிவற்றின் அடிப்படையில் கட்டணம் ஏற்றப்படுவதாக அது கூறியது.
இந்நிலையில் கட்டண உயர்வைச் சமாளிக்கக் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்குப் பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு பற்றுச்சீட்டும் 60 வெள்ளி மதிப்புடையது என்று மன்றம் குறிப்பிடப்படுகின்றது.
(Visited 24 times, 1 visits today)