இந்தியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இந்தியாவின் வான்பரப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள அச்சம் – பாதுகாப்பு அதிகாரிகள் விளக்கம்

இந்தியாவின் வான்பரப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளையடுத்து விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு உறுதியளித்துள்ளனர்.

வான்பரப்பு பாதுகாப்பானது, பயணிகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இந்திய விமானங்களுக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது குறித்து டெல்லியில் விமானப் போக்குவரத்துத் துறை பாதுகாப்பு அமைப்பான BCAS சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதிகாரிகள் கடந்த சில நாட்களில் 70 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஒரே நாளில் 30 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஜெனரல் ஜூல்பிகர் ஹசனிடம் ஏர் இந்தியா ,ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து நேரில் விளக்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஜி ஹசன், பயணிகளின் பாதுகாப்புக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதால் விமானப் பயணிகள் அச்சமின்றி பயணம் செய்யலாம் என்று கூறினார்

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!