அமெரிக்காவில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகனை சுட்டுக்கொன்றுவிட்டு கதறியழுத தந்தை!

அமெரிக்காவில், வாக்குவாதம் செய்த மகனை சுட்டுக்கொன்றுவிட்டதாக தந்தை ஒருவர் தனது மனைவியிடம் கதறியழுது கூறும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புளோரிடாவைச் சேர்ந்த காண்ட்ரிராஸ் என்பவர், கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் திகதி தனது 22 வயது மகன் எரிக்கை சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.
வீட்டின் டோர்பெல் கேமரா மூலம் மனைவியை தொடர்புகொண்ட காண்ட்ரிராஸ், கோபம் தலைக்கேறி மகனை சுட்டுவிட்டதாகவும், அவர் மூச்சு பேச்சின்றி இறந்து கிடப்பதாகவும் வேதனையுடன் கூறினார்.
அதன்பின் நடந்ததை கூறி பொலிசாரை வரவழைத்த காண்ட்ரிராஸ் சரணடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
(Visited 20 times, 1 visits today)