மத்திய கிழக்கு

காங்கோவில் மகனின் இறுதி சடங்கில் 9குழந்தைள் உள்பட 13 பேரை சுட்டுக்கொன்ற தந்தை!

காங்கோ நாட்டில் நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. கடற்படை வீரரான இவரது மகன் திடீரென இறந்து விட்டார்.இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தது.

இதில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென ஆவேசம் அடைந்த முகுவா தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகன் இறுதி சடங்கில் பங்கேற்ற கூட்டத்தினர் மீது சரமாரியாக சுட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உயிருக்கு பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் 9 குழந்தைகள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். முகுவா ஏன் இந்த செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. பொலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 19 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.