யாழில் 6 வயது மகளுக்கு உணவில் விசத்தைக் கலந்து கொடுத்த தந்தை

யாழ்ப்பாணத்தில் தந்தையொருவர் அவரது 6 வயது மகளுக்கு உணவில் விசத்தைக் கலந்து கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – இளவாலை – உயரப்புலம் பகுதியிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த தந்தை விசம் கலந்த உணவைச் சிறுமிக்கு வழங்க முற்பட்ட போது அவரது தாய் அதனைத் தடுத்துள்ளார்.
எனினும், சிறுமிக்கு விசம் கலந்த உணவு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது தாய் வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தந்தை தலைமறைவாகியுள்ளதுடன், அவரைத் தேடும் நடவடிக்கையில் இளவாலை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.