இலங்கை செய்தி

பரீட்சைக்காக தாயின் மரணத்தை மகனிடம் மறைந்த தந்தை

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நிறைவடையும் வரை, தனது தாயின் மரணத்தை மகனுக்கு கூறாமல் மறைத்த தந்தை ஒருவர் தொடர்பான செய்தி காலி பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இந்த பெண் கடந்த 12ம் திகதி தனது குடும்ப உறுப்பினர்களுடன் மதிய உணவை உட்கொண்டு, பின்னர் அனைவரும் ஐஸ் கிரீம் உட்கொண்டுள்ளனர்.

இதன்போது, குறித்த பெண்ணுக்கு திடீர் இருமல் ஏற்பட்ட நிலையில், அவர் சுயநினைவை இழந்து கீழே வீழ்ந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சாதாரண தர பரீட்சை நிறைவடைவதற்கு நான்கு நாட்கள் எஞ்சியிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

தனது தாயின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனால், பரீட்சையை சிறந்த முறையில் தனது மகன் எதிர்கொள்ள மாட்டார் என்ற அச்சத்தினால், தாயின் உயிரிழப்பை தந்தை தனது மகனிடம் மறைத்துள்ளார்.

பரீட்சை நேற்றைய தினம் (15) முடிவடைந்த நிலையில், சடலம் வீட்டிற்கு இன்று (16) கொண்டு வரப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!