உத்தரபிரதேசத்தில் ஆடையை அழுக்காக்கிய 6 வயது சிறுமியை கொன்ற தந்தை மற்றும் மாற்றாந்தாய்
உத்தரபிரதேச(Uttar Pradesh) மாநிலம் காஜியாபாத்தில்(Ghaziabad) ஆறு வயது சிறுமி விளையாடும் போது உடைகள் அழுக்காகிவிட்டதால் அவரது தந்தை மற்றும் மாற்றாந்தாயால் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.
வேவ் சிட்டி(Wave City) காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட தஸ்னா(Dasna) நகரின் பாஜிகரன் மொஹல்லாவில்(Bajikaran Mohalla) இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை விளையாடும்போது தற்செயலாக வடிகாலில் விழுந்ததால், அவரது ஆடைகள் அழுக்காகிவிட்டன. இதனால் ஆத்திரமடைந்த தந்தை மற்றும் மாற்றாந்தாய் குழந்தையை கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர் குழந்தை வீட்டில் தனியறையில் தனியாக விடப்பட்டது, அங்கு அவள் காயங்கள் மற்றும் குளிரில் உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் உடலில் 13 காயங்கள் இருப்பதும் அதில் விலா எலும்புகள் உடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.





