இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் பலி – தாய் மருதிதவமனையில் அனுமதி !

கொழும்பு ஹைலெவல் வீதியின் கொஸ்கம மிரிஸ்வத்த பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றிய லொறி ஒன்று டயர் வெடித்து வீதியை விட்டு விலகி எதிர் திசையில் ஓடி மோட்டார் சைக்கிளில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொஸ்கம, அலுபோடல பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தந்தையும் 8 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.

லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்