இலங்கையில் கோர விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த தந்தை மகள்

வத்தளை – எந்தேரமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எந்தேரமுல்லயில் இருந்து வத்தளை நோக்கி பயணித்த கார், சமிக்ஞை விளக்குகளை மீறி கடவையை கடக்க முற்பட்ட போது எதிரே வந்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காரில் பயணித்த பியகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரொருவரும் கொழும்பில் தனியார் துறையில் பணிபுரிந்து வந்த 34 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொட்ரபில் மேலதிக விசாரணைகளை எந்தேரமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 16 times, 1 visits today)